விண்டோஸ் ரன் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder, Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா? எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
XP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால் Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம்.
இதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம்.
| Sl.No | வார்த்தை | பயன் |
| 1 | taskmgr | Task Manager ஐ ஓபன் செய்ய |
| 2 | cmd | இது command Prompt ஐ ஓபன் செய்ய உதவுகிறது |
| 3 | iexplore | இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய |
| 4 | iexplore + “web address” | குறிப்பிட்ட தள முகவரி கொடுத்தால் நேரடியாக அந்த தளத்தை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் வாயிலாக ஓபன் செய்யலாம். |
| 5 | compmgmt.msc | Computer Management ஓபன் செய்ய |
| 6 | services.msc | Services பகுதிக்கு செல்லலாம். |
| 7 | eventvwr | Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம் |
| 8 | devmgmt.msc | உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்ய உதவுகிறது. |
| 9 | msinfo32 | உங்கள் கணினி குறித்த அனைத்து தகவல்களும் அறிந்துக் கொள்ள ஒரே இடம் இது |
| 10 | cleanmgr | Disk Cleanup செய்ய இது உதவும் |
| 11 | mmc | Microsoft Management Console க்கு செல்ல |
| 12 | excel | MS Excel ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
| 13 | powerpnt | MS Power Point ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
| 14 | winword | MS Wordஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
| 15 | notepad | Notepad ஓபன் செய்ய |
| 16 | wordpad | Wordpad ஓபன் செய்ய |
| 17 | calc | Calculator ஓபன் செய்ய |
| 18 | mspaint | MS-Paint ஓபன் செய்ய |
| 19 | wmplayer | விண்டோஸ் மீடியா ப்ளேயர் ஓபன் செய்ய |
| 20 | rstrui | System Restore பகுதிக்கு அழைத்து செல்லும் |
| 21 | control | Control Panel ஐ ஓபன் செய்திட |
| 22 | control printers | உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை பார்க்க, பிரச்சினைகளை சரி செய்ய |
| 23 | msconfig | msconfig ஐ ஓபன் செய்ய |
| 24 | dxdiag | Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள |
| 25 | osk | On Screen Keyboard ஓபன் செய்ய |