உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

குடியரசு என்பதன் நேரடிப் பொருள், “மக்களாட்சி’. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர்களும் ஆங்கிலேயரிடம் இருந்து “டொமினியன்’ அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர்களிடம் மாற்றம் வந்தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.

அடிப்படை கடமைகள்: இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 5ல் மக்களின் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

* தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்
* அனைவரும் நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
* ஜாதி, மதம், இன பாகுபாடின்றி சகோதர மனப்பான்மையோடு ஒன்றாக பழக வேண்டும்.
* பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
* இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
* வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், அறிவியல் மற்றும் மனிதாபிமான உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
* அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
* 6-14 வயது குழந்தைகள் கல்வி பெறுவது அவசியம்.

கொள்ளை கொள்ளும் குடியரசு அணிவகுப்பு: 1950ம் ஆண்டு ஜன.26ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளை ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். 1930ம் ஆண்டு ஜனவரி 26 அன்று, இந்திய விடுதலை இயக்கத்தினர் “பூரண சுதந்திரம்’ அடைய தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தினத்தை நினைவு கூரும் வகையில் ஜன.26, குடியரசு தினமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு முக்கிய இடம் பெறுகிறது. தலைநகர் டில்லியில் உள்ள இந்தியா “கேட்டில்’ பிரதமர் வீரவணக்கம் செலுத்தி விழாவை துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்துவிடுகிறது.

குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது.

இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.

1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில் testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sys என்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு (batch) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் (Virtual Device Drivers – VxDs) என்று அழைக்கப் படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.

8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது. நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.

சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும். அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும். இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும்.

கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம். ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.

நன்றி: மேலப்பாளையம் பதிவுகள்

விண்டோஸ் ரன் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder, Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா? எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.

XP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால் Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம்.

இதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம்.

Sl.No வார்த்தை பயன்
1 taskmgr Task Manager ஐ ஓபன் செய்ய
2 cmd இது command Prompt ஐ ஓபன் செய்ய உதவுகிறது
3 iexplore இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய
4 iexplore + “web address” குறிப்பிட்ட தள முகவரி கொடுத்தால் நேரடியாக அந்த தளத்தை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் வாயிலாக ஓபன் செய்யலாம்.
5 compmgmt.msc Computer Management ஓபன் செய்ய
6 services.msc Services பகுதிக்கு செல்லலாம்.
7 eventvwr Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம்
8 devmgmt.msc உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்ய உதவுகிறது.
9 msinfo32 உங்கள் கணினி குறித்த அனைத்து தகவல்களும் அறிந்துக் கொள்ள ஒரே இடம் இது
10 cleanmgr Disk Cleanup செய்ய இது உதவும்
11 mmc Microsoft Management Console க்கு செல்ல
12 excel MS Excel ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)
13 powerpnt MS Power Point ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)
14 winword MS Wordஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)
15 notepad Notepad ஓபன் செய்ய
16 wordpad Wordpad ஓபன் செய்ய
17 calc Calculator ஓபன் செய்ய
18 mspaint MS-Paint ஓபன் செய்ய
19 wmplayer விண்டோஸ் மீடியா ப்ளேயர் ஓபன் செய்ய
20 rstrui System Restore பகுதிக்கு அழைத்து செல்லும்
21 control Control Panel ஐ ஓபன் செய்திட
22 control printers உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை பார்க்க, பிரச்சினைகளை சரி செய்ய
23 msconfig msconfig ஐ ஓபன் செய்ய
24 dxdiag Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள
25 osk On Screen Keyboard ஓபன் செய்ய

முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரை களில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.

இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன் படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்ப தாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.

ஞான முத்திரை

கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.

 நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக் குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

வருண முத்திரை

பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

 உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கி றார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.

 சூன்ய முத்திரை

கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும்போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப் பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.

 இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்த மான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.

 ப்ராண முத்திரை

கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.

 இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்த மான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.

 அபான முத்திரை

கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.

இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.

 அபான வாயு முத்திரை

அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல் களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட் காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது

 இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப் படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

 லிங்க முத்திரை

படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.

 சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

 இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.

முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.

பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள் ளுங்கள்.

இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.

இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவை யான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட கால ங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

 ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பாக இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச் சைக்கு இணை என்று சொல்லும் அளவு பரிசோதனைகள் முடிவு விஞ்ஞான பூர்வமாக முழுமை யாக வெளியாகி விடவில் லை. ஆனால் நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரி சோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை.

நன்றி: விதை2விருட்சம்

பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது.

இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும், ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம் வாங்குகின்றனர். சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை.

இதனால், இணைய இணைப்பினைப் பயன் படுத்தினால், ஒரு மணிக்கு இவ்வளவு என, அந்த பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் மணிக்கணக்கினாலான திட்டத்தினை சில நிறுவனங்கள் மட்டுமே அளித்து வருகின்றன.

எது எப்படி இருந்தாலும் நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை http://codebox. org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது ஓர் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆகிய சிஸ்டங்களில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது. இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர், ஸிப் பைலை விரித்து, பைல்களை ஒரு போல்டரில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அப்ளிகேஷன் பைலை இயக்கி, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும்.

 இதன் பின்னர், நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு டேட்டா அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும். இந்த டேட்டா எங்கிருந்து வந்தது என்ற தகவல் எதனையும் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளாது. எந்த நேரத்திலும், நீங்கள் இதனை இயக்கி, இதன் இணைய தளம் சென்று, உங்கள் இணையப் பயன் பாடு குறித்த தகவல்களைக் காணலாம். http://localhost:2605/என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த தகவல்களைக் காணலாம்.

 இங்கு கிடைக்கும் இன்டர்பேஸில் காட்டப்படும் மானிட்டரில், அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம், கிராபிகல் மற்றும் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History டேப்பில் கிளிக் செய்தால் நீங்கள் பயன் படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். டவுண்லோட் மற்றும் அப்லோட் பார் கிராப் மூலம் காட்டப்படுகிறது. Summary டேப் ஒரு மாதத்தில் நீங்கள் மேற் கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query டேப்பின் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான டேட்டா எவ்வளவு என்று காணலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட டேட்டா டவுண்லோட் அல்லது அப்லோட் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி செட் செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.

Calculator என்ற டேப் மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் பைல் இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கம்ப்யூட்டரில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.

அடுத்த பக்கம் »